31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்


 க்கம்

துறந்து மகிழ்ந்திருந்தாய் அம்மா…!

நீங்கள் இல்லாமல் அரண்மனையாய் இருந்தாலும்
அநாதையாய் தவிக்கின்றோம்…!
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும் தாயே
உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா?

அடிமுடி அறியமுடியா அற்புதமே!
தாலாட்டி சோறூட்டி வளர்த்த சொற்பதமே!
தினம் தொழுகின்றோம் உன் பொற்பாதமே!

இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும்
அன்போடு எமை ஆழ்வாய்!
என்றென்றும் எழிலோடு- எம்
நெஞ்சிலெ நீ வாழ்வாய்!

உங்கள் ஆத்மா சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!   

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம்,குடும்பத்தினர்